ஆஸ்கர் சென்ற RRR "நாட்டுக்குத்து பாடல்" உங்கள் ஆதரவு யாருக்கு?

ஆஸ்கர் சென்ற RRR "நாட்டுக்குத்து பாடல்" உங்கள் ஆதரவு யாருக்கு?


சினிமாவிற்காக ஆண்டுதோறும் தரப்படும் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த RRR படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுக்கூத்து பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளதை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் இந்த வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடலும் அதற்கு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடனம்  ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது. பிறகு படம் வெளியாகிய பின்னர் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது. 

தற்போது இந்திய ரசிகர்கள் பெருமை கொள்ளும் விதமாக இந்த பாடல் ஆஸ்கர் சிறந்த பாடல்கள் வரிசையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதிச்சுற்றில் இந்த பாடல் வெற்றி பெரும்பச்சத்தில் இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான விருது இந்திய திரைப்படமான RRRக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். ஏற்கனவே இந்தியா சார்பாக ஏ.ஆர்.ரகுமான் ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தற்போதும் RRR
திரைப்படத்தின் நாட்டுக் கூத்து பாடல் ஆஸ்கர் விருதை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தரும் என்று சினிமா ஆர்வலர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

ad