இன்று வெளியிடப்பட்ட அவதார் 2 படமானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
3D எஃபெக்ட்டுடன் எடுக்கப்பட்ட படம்.
ஹாலிவுட் பிரபலமான டைட்டானிக் பட இயக்குனரான ஜேம்ஸ் கேமரூனால் 2009 ஆம் ஆண்டு அவதார் 1 படம் எடுக்கப்பட்டது.இந்த படமானது வேற்றுக்கிரக வாசிகளுக்கும் மனிதனுக்குமான தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.டெக்னிக்கல் மற்றும் பாக்ஸ் ஆபிஸில் உலக அளவில் வெற்றி படமாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவதார் இரண்டாம் பாகத்திற்கான வரவேற்பு மிகுந்த அளவில் ரசிகர்களிடையே இருந்தது.
13 வருடங்களுக்குப் பிறகு அதை பூர்த்தி செய்யும் விதமாக படமானது தரமான முறையில் வெளிவந்துள்ளது.
அவதார் இரண்டாம் பாகம் ஆனது முற்றிலும் வேறுபட்ட முறையில் எடுக்கப்பட்டது.
டெக்னிக்கல் சம்பந்தமான விஷயத்தில் படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று சொல்லலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த படம் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான திரையரங்குகளில் 3D தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த படம் வெளியிடப்படவில்லை மற்றும் வாரிசு துணிவு படங்களினால் பெரும்பாலான திரையரங்கங்கள் படத்தை திரையிட முன் வரவில்லை.
இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது என்று சொல்லலாம்.